இன்றுவரை தெரியாது அவள் குழந்தைக்கு
யார் தகப்பன் என
அறியப்பட்டிருக்கிறோம்
யோசேப்பு அவள் கணவன் என
என்றும் நாம் நம்பப்போவதுமில்லை
வானிலிருந்து பரிசுத்த ஒளி
கருப்பைக்குள் விழுவதற்கான சாத்தியங்களை
பிறர் சிலுவையை தன் தோளில் ஏற்றி
சக மானுடனுக்காய் தன்னுயிர் ஈந்தவனை
ஈன்றவளாதலால் அவள்
என்றும் கருனையுள்ளவள்