ஒரு தண்டித்தலுக்காக வரவழைக்கப்பட்டிருந்தாள்
தலைமை ஆசிரியனான எனக்கு முன்னால்
தொடை நடுங்க நின்றுகொண்டிருந்தாள்
அந்த எட்டாம் வகுப்பு மாணவி
தலை கோதி
சுற்று முற்றும் பார்த்தொரு முத்தம் வைத்து
கட்டியணைக்கும்போது சொன்னேன்
'நான் உனக்கு அப்பா மாதிரி 'நாவறண்டு குரல் சிதறி கேட்டாள்
'அப்பா இப்படியெல்லாம் நடப்பதில்லையே '