எப்படியோ தப்பி
வவுனி காட்டிலிருந்து வந்திருந்தாள்ஏங்கும் [ அல்லது அவ்வாறு நடிக்கும் ]
சொற்களால் கேட்டேன்'ஈழம் இனி கனவுதானா ?'
உறைந்த கண்கள் உலர உலர
உரக்க சிரித்தாள்ஆண்கள் ஆயுதங்கள்தான்
வெடித்து சிதறுவார்கள்
சுட்டு களைப்பார்கள்
ஒடுங்கி உறங்குவார்கள்
பெண்கள் இருக்கும்வரை
சுதந்திரமும் இருக்கும் எனறாள்
அவள் அடிவயிறு பெருத்திருந்தது