ஊரைவிட்டு தள்ளிய
மலையடிவாரத்தில்
கல்தூண்கள் உடைந்து நொறுங்கி
கூரை மீது மண்மூடி
கோயிலா சத்திரமா என
இனம் புரியாத ஒன்றிற்கு பின்தான்
அவன் நிகழ்த்திக்கொண்டிருந்தான் அதை
துள்ள துடிக்க ஆடைகளின்றி
மயங்கி சரிந்திருந்தாள் ஒரு பெண்
உட்பிரகாரத்திற்குள்
உடைந்து நொறுங்கி கிடக்கும்
அவளது கண்களில் அசைவு தெரிகிறது