ஆசைப்பட்டதால்
மூக்கறுபட்டாள் ஒருத்தி
ஆசை கணவனுக்காக
முலையரிந்தாள் ஒருத்தி
காலடியில் கிடந்தவனால்
முடி துறந்தாள் ஒருத்தி
கணவனென்று நம்பி
கல்லானாள் ஒருத்தி
சிறைவாசம் முடிந்தும்
சிதை புகுந்தாள் ஒருத்தி
ஆண்டவர்கள் திரண்ட சபையில்
அம்மணமாக்கப்பட்டாள் ஒருத்தி
நள்ளிரவில் துறந்தவனுக்காக
நாளெல்லாம் காத்திருந்தாள் ஒருத்தி
...............................அவள்கள் எப்போதும்
அவள்களாகவே