கனவுகள் நரைத்து
இளமை இளைத்தபிறகுதான் வசப்பட்டான் அவன்
பூ சூடி புத்தாடை தரித்து
வாசனை திரவியம் பூசி
மல்லிகைகள் இறைந்த அறையில்
வெட்கம் நுரைக்க காத்திருக்கிறேன்
கதவு பிளந்து
வசீகர புன்னகையை
அறையெங்கும் சுழலவிட்டு நெருங்கியவன்
சடுதியில் விலகி பாய் சுருட்டி
யாதொன்றும் மொழியாது திகைப்பிலாழ்த்தி
விரைந்து வெளியேறினான்
நள்ளிரவில்
காமத்தின் கைகள் முலை திருக
எவரொருவரும் அறியாவண்ணம்
கொலுசொலி பதுக்கி
மறுபடி அணுகினேன் அவனிடம்
கள்ள பிதா
மொட்டை மாடியில் படுக்கை விரித்து
வானம் வெறித்த கண்கள் சொருக
விறைத்த குறியை வருடி வருடி
சுய இன்பத்தில்
திளைத்திருத்தல் கண்டதிர்ந்தேன்
ரவிக்கைக்குள் ஒளித்து வைத்திருந்த
ஆணிகளை உருவி
குருதி கொப்பளிக்க
அங்கேயே அவனை அறைந்து கொன்று
பின்திரும்பி படியிறங்குகிறேன்
நட்சத்திரங்களை புணர்கிற ஒருவனுக்கு
கண்விழித்திருக்காமல்
நித்தம் ஒரு
காமுகனுடன் களித்திருப்பேன் இனி
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக