"கண்ணகி நீதி கேட்ட இடத்தில் நீதி கேட்க வந்திருக்கிறேன் ".மதுரையில் நின்று கொண்டு இப்படி முழங்கியது யார்
தெரியுமா ?
தெரியுமா ?
வேறு யாருமல்ல ...சாட்சாத் ஜெய லலிதா தான் .
இதே ஜெயலலிதா அவர்கள் தான் அவரது ஆட்சி காலத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் இருந்தா கண்ணகி சிலையை இடித்து பெயர்த்து ,சாக்கு மூட்டையில் கட்டி ,அருங் காட்சியகத்தின் கொடௌன் ற்குள் கடாசியவர். .
இதை தான் 'கால கொடுமை 'என்றுசொல்வார்களோ.
அதற்காக சொல்லப்பட்ட காரணம் இன்னும் விநோதமானது .'
போக்குவரத்திற்கு இடைஞ்ச்சல் '.
போக்குவரத்திற்கு இடைஞ்ச்சல் '.
மெரினாவில் உழைப்பாளர் சிலை தொடங்கி காந்தி சிலை வரை வரிசையாக எண்ணற்ற தலைவர்களின் சிலைகள் இருக்கிறது .அன்று விசித்திரமாக கண்ணகி சிலை மட்டும் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஆக இருந்திருக்கிறது .
கண்ணகி சிலை அகற்றபடுமுன்பு ஒரு லாரி வேறு வந்து மோதியது !அத்தனை சிலைகளையும் மீறி அந்த லாரிக்கு கண்ணகியின்
கால் சிலம்பின் மீது அப்படி என்ன கோபமோ ?
கால் சிலம்பின் மீது அப்படி என்ன கோபமோ ?
ஆனால் உண்மையான காரணம் 'வாஸ்து தோஷம் '.
மெரினாவில் வலது கையில் கால் சிலம்போடு நின்று கொண்டிருந்த கண்ணகியின் இடது கை' போயஸ் கார்டனை ' சுட்டி கொண்டு நின்றதாம் .இத்தனைக்கும் மேரினாவிற்கும் போயஸ் கார்டனுக்கும் ஐந்து கிலோ மீட்டர் தூரம்!!!
வாஸ்த்து ,பூஜை புனஷ்காரம் ,ஜோசியம் ,இவைகள் தான் ஆட்சியை தீர்மானிக்கிறது என்றால் ,அரசியலுக்கு வந்த நாளிலிருந்து இவர் மட்டும் தானே ஆட்சி புரிந்திருக்க முடியும் ?
எனக்கு தெரிந்து ஆட்சியை தீர்மானிப்பது 'வாக்கு சீட்டு 'கூட அல்ல .அரசை தீர்மானிப்பது 'மக்களின் மறதி ' தான்.
அவர்கள் ஒரு ஆட்சியின் 'சாதகங்களை' அல்லது 'பாதகங்களை '
அல்லது வேறு எதற்காகவோ 'இரண்டையும்' சேர்த்து மறந்து விடுவதுதான் ஒரு அரசை தீர்மானிக்கிறது .
4 கருத்துகள்:
பிழை இல்லாமல் முதலில் எழுதக் கற்றுக்கொண்டு பின்னர் பிழை கண்டுபிடிக்கலாம்.
முதலில் தமிழராகப் பெயரை மாற்றுங்கள்,மோசஸ் என்ற மதசார்புடைய பெயரை வைத்துக்கொண்டு,
எங்கள் கண்ணகி பற்றி பேசுகிறீர்கள்.
நண்பரே , நான் கிறிஸ்தவன் அல்ல .அதை உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன் .
மேலும் எனது தந்தை வைத்த பெயரை நீங்கள் சொல்லி மாற்றுவதாக உத்தேசம் இல்லை.
kannakiai patri pesa matham matrum peyar avasiyamillai
//எனக்கு தெரிந்து ஆட்சியை தீர்மானிப்பது 'வாக்கு சீட்டு 'கூட அல்ல .அரசை தீர்மானிப்பது 'மக்களின் மறதி ' தான்.//
எனக்கு தெரிந்து அதே மறதி தான் இன்றைய கேடு கெட்ட ஆட்சியையும் நிருவி உள்ளது.
மறதி 1. டாக்டர் பட்டம் வாங்க அண்ணாமலை பல்கலை கழக மாணவர் கொலை, பெற்றோரை மிரட்டி தன் மகன் இல்லை என்று சொல்ல வைத்தது.
மறதி 2. சர்க்காரியா கமிஷன் பரிந்துரை (scientific corruption)
மறதி 3. தமிழன் சோற்றால் அடித்த பிண்டம்.
இன்னும் பல பல....
கருத்துரையிடுக